இந்திய ரயில்வே துறையில் 11558 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க முழு தகவல் உள்ளே

Indian Railway NTPC Job: இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம். இந்திய ரயில்வேயில் 11558 ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு  அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் தெளிவாக பின்பற்றி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் இந்த பணியிடங்களுக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை விரிவாக காண்போம்.

வயது விவரங்கள்

நீங்கள் இந்த இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 33 வயது உட்பட்டவராக இருக்க வேண்டும். இருந்தபோதிலும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

இந்த இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Chief Commercial – Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant – Typist, Senior Clerk – Typist பணியிடங்களுக்கு டிகிரி படித்திருக்க வேண்டும். Commercial – Ticket Clerk, Accounts Clerk – Typist, Junior Clerk – Typist, Trains Clerk பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்

இந்தப் பணியிடங்களுக்கு சம்பளம் என்னவென்றால் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் பணியிடங்களுக்கு மாத சம்பளம் ரூ. 19,900 – 35,400 வரை கிடைக்கும்.

விண்ணப்ப கட்டணம்

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250.

விண்ணப்பிப்பது எப்படி

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும். அனைத்து தகவல்களையும் சரியாகப் பூர்த்தி செய்த பிறகு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

முக்கிய இணைப்புகள்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளம் கீழே கொடுத்துள்ளேன் அதன் மூலமாக நீங்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 14 செப்டம்பர் 2024

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13 அக்டோபர் 2024

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply 

Leave a Comment

Join Group!