ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 2 பட்ஜெட் ரீசார்ஜ் பிளான்கள்! உடனே ரீசார்ஜ் பண்ணுங்க

Jio New 2 Budget Recharge Plans: வணக்கம் நண்பர்களே தொலைதொடர்பு நிறுவனங்கள் தனது ரீசார்ஜ் பிளான்களை அடிக்கடி ஏற்றி கொண்டே இருந்தாலும் பல சமயங்களில் சிறப்பான ரீசார்ஜ் பிளான்களை வழங்குகிறது. அதிலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த பல பிளான்களை கொண்டு வந்து இருக்கிறது.

எண்ணற்ற வாடிக்கையாளர்களை கொண்ட ஜியோ நிறுவனமானது அதிகபட்சமான ரீசார்ஜ் பிளான்களை மக்களுக்கு கொடுத்து வருகிறது. தற்போது ஜியோ நிறுவனம் கொண்டு வந்துள்ள2 சிறப்பான பட்ஜெட் ரீசார்ஜ் பிளான்களை பற்றி தெளிவாகவும் அதனுடைய நன்மைகளை விளக்கமாகவும் காணலாம்.

ஜியோவின் ரூ.189 ரீசார்ஜ் பிளான்:

ஜியோவின் ரூ.189 ரீசார்ஜ் பிளான் திட்டம் மலிவு விலையில் அதிக சேவைகளை விரும்புவோருக்கு மிகச் சிறந்ததாகும். இந்த திட்டம் 28 நாட்கள் காலத்திற்கு செல்லுபடியாகும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் செய்துகொள்ளலாம்.

இது அதிக அழைப்புகள் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனுடன், 300 எஸ்எம்எஸ்-க்களும் வழங்கப்படுகின்றன, இது குறைந்த விலையில் மிகச் சிறந்த சேவையாக கருதப்படுகிறது. இந்த திட்டம், குறைந்த செலவில் நல்ல சேவைகளை அனுபவிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த பிளானாக இருக்கும்.

ஜியோவின் ரூ.479 ரீசார்ஜ் பிளான்:

ரிலையன்ஸ் ஜியோ,  ரூ.479 என்ற புதிய ரீசார்ஜ் பிளான் திட்டத்தை அறிமுகம் செய்யியுள்ளது. இந்த திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும், இது நீண்ட கால வேலிடிட்டியுடன் அதிக நன்மைகளை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருவன.

  • 6 ஜிபி டேட்டா: 84 நாட்களுக்கு மொத்தம் 6 ஜிபி (GB) உபயோகத்துக்கான டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா அளவுடன், இணையத்தை அதிக அளவிலான உபயோகத்திற்கு சிறந்ததாக இருக்கும்.
  • வரம்பற்ற வாய்ஸ் காலிங்: வாய்ஸ் காலிங் சேவையை வரம்பில்லாமல் அனுபவிக்கலாம். இது அதிகமான அழைப்புகள் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • பொழுதுபோக்கு சேவைகள்: இந்த திட்டம், ஜியோ டிவி, ஜியோ சினிமா, மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் சந்தாவை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. இது, திரைப்படங்கள், தொடர்களை நேரடியாகப் பார்க்கவும், கிளவுட் சேமிப்பகத்திலுள்ள உள்ளடகங்களை அணுகவும் உதவும்.
  • கிளவுட் ஸ்டோரேஜ் : ஜியோ கிளவுட் ஸ்டோரேஜ் பயன்படுத்தி உங்கள் தகவல்களை மற்றும் கையேடுகளை நன்கு சேமிக்கலாம்.

இந்த திட்டம், நீண்ட காலத்திற்கு அதிக நன்மைகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும். இது மொத்தமாகப் போதுமான சேவைகள் மற்றும் வசதிகளை வழங்குவதன் மூலம், வாடிக்கையாளர்களின் செலவுகளைக் குறைக்கிறது.

ஜியோ வாடிக்கையாளர்களே! இந்த  மேலே குறிப்பிட்டுள்ள 2 ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்தி பயன்பெறுங்கள். மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களைக் காட்டிலும் இந்த ரீசார்ஜ் திட்டம் சிறந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் ஜியோ சிம்மையே பயன்படுத்துகின்றனர். ஆகையால் அவர்களுக்கு இந்த திட்டம் மிக சிறப்பானதாக அமையும்.

Leave a Comment

Join Group!