TNPSC Group 4 Vacancy Increased: டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற குரூப் 4 தேர்வு, தமிழகத்தில் பெரிய அளவில் நடத்தப்படும் தேர்வுகளின் ஒன்றாகும். இந்த தேர்வின் மூலம் தமிழ்நாடு அரசின் அமைச்சுப் பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்புகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சியானது குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடத்தியது. இந்த குரூப்-4 தேர்வானது மொத்தம் 6244 பணியிடங்களுக்காக நடத்தப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வுக்கு அப்ளை செய்து 15.8 லட்சம் பேர் தேர்வை எழுதினர். தமிழக முழுதும் 7247 தேர்வு மையங்களில் ஜூன் ஒன்பதாம் தேதி இந்த தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இந்தப் பணியிடங்களில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் போன்ற பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்கள் அடங்கும். தமிழ்நாடு அரசு தன்னுடைய நிர்வாகத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்காக, தேர்வின் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து இப்பணியிடங்களை நிரப்புகிறது. இதனால், டி.என்.பி.எஸ்.சி தேர்வு, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு தேடுவோரின் கவனத்தை பெருமளவில் ஈர்க்கிறது.
குரூப் 4 தேர்வு முடிவுகள்:
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதை தேர்வர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வந்த நிலையில், தேர்வாணையம் அக்டோபர் மாதத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. ஜூன் 19 ஆம் தேதி, குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதன் மூலம் தேர்வர்கள் தங்களது விடைகளின் சரிபார்ப்புகளை செய்து முடிவு பற்றி ஒரு முன்னோட்டத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதற்குப் பிறகு, அக்டோபர் மாதத்தில் தகுதி அடிப்படையில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
குரூப் 4 தேர்வு 480 பணியிடங்கள் அதிகரிப்பு:
இப்போது குரூப் 4 தேர்வுக்கு கூடுதலாக 480 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதனால், மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 6704 ஆக உயர்ந்துள்ளது. புதியதாக சேர்க்கப்பட்ட பணியிடங்களில் முக்கியமானவை:
இளநிலை உதவியாளர் (128), தட்டச்சர் (14), சுருக்கெழுத்து தட்டச்சர் (15), கேஷியர் (1), உதவியாளர் (3), இளநிலை கணக்கு உதவியாளர் (8), வனக் காப்பாளர் (30), வனவர் (40), பில் கலெக்டர் (47), மற்றும் உதவி விற்பனையாளர் (194). இந்த பணியிடங்களின் சேர்க்கை, அதிகபட்சமாக கிராமப் பகுதியில் உள்ள நிர்வாக பணியாளர்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றும்.
தேர்வர்கள் மகிழ்ச்சி:
குரூப் 4 தேர்வுக்கு கூடுதலாக பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டதால், தேர்வில் பங்கேற்றவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்த நிலைமையில், தேர்வர்கள் தங்களது வேலைவாய்ப்பு திறன்களை மேலும் மேம்படுத்தி வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற முயற்சிக்கின்றனர். தமிழ்நாட்டின் நிர்வாகம் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுவதால், அரசின் திறன் மிக்க பணியாளர்களைத் தேர்வு செய்வதில் இந்த தேர்வு முக்கியம் வாய்ந்தது.
தற்போது, TNPSC Group 4 Exam 480 கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ள தகவல் தேர்வர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுத் தேர்வில் வெற்றிபெற துடிக்கும் பலரை, வேலைவாய்ப்புக்கான போட்டி மிகுந்த நிலையில் கூடுதலாக இத்தகைய பணியிடங்களை அறிவிப்பது மேலும் ஊக்குவிக்கின்றது.
முக்கிய இணைப்புகள்
TNPSC ரிசல்ட் அதிகாரப்பூர்வ இணையதளம் : Visit Here