டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ள புத்தம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்க வழிமுறைகள்

TNPSC Assistant Public Prosecutor Job: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களுக்கான நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குற்றவழக்குத் தொடர்வுத் துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் மொத்தம் 51 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் தெளிவாக பின்பற்றி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் இந்த பணியிடங்களுக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை விரிவாக காண்போம்.

வயது விவரங்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குற்றவழக்குத் தொடர்வுத் துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களுக்கு பணியிடங்களுக்கு 01.07.2024 அன்று 36 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. இருந்தபோதிலும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குற்றவழக்குத் தொடர்வுத் துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து B.L., Degree படித்திருக்க வேண்டும் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.

சம்பள விவரங்கள்

இந்தப் பணியிடங்களுக்கு சம்பளம் என்னவென்றால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குற்றவழக்குத் தொடர்வுத் துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிகளுக்கு மாத சம்பளம் நிலை 22 கீழ் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. தேர்வுக் கட்டணம் ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

தேர்வு செய்யும் முறை

இந்தப் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குற்றவழக்குத் தொடர்வுத் துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

முக்கிய இணைப்புகள்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளம் கீழே கொடுத்துள்ளேன் அதன் மூலமாக நீங்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 13 செப்டம்பர் 2024

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12 அக்டோபர் 2024

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply 

Leave a Comment

Join Group!