ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மலிவு விலை ரீசார்ஜ் பிளான்! பயன்படுத்தி பாருங்க

Jio Low Price Recharge Plan: நாளுக்கு நாள் தொழில்நுட்ப நிறுவனங்கள் புதுப்புது கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ தற்போது புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது அதைப் பற்றி நாம் விரிவாக இந்த கட்டுரையில் காண்போம்.

ரூபாய் 198 ஜியோ ரீசார்ஜ் திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய மற்றும் மலிவான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் விலை வெறும்  மட்டுமே. இது ஜியோவின் மலிவான திட்டமாகும். இந்த திட்டத்தில் பயனர்கள் மற்ற அம்சங்களுடன் வரம்பற்ற 5ஜி டேட்டாவைப் பயன்படுத்தலாம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 14 நாட்கள். 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய சலுகைகள் இதில் கிடைக்கும்.

குறைந்த செலவில் 5ஜி டேட்டா:

ரூ. 198 திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவைப் பெறலாம். இந்த டேட்டாவை 14 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் அன்லிமிடெட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது. இது தவிர, Jio TV, Jio Cinema மற்றும் Jio Cloud போன்ற சேவைகளுக்கான சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறைந்த செலவில் 5ஜி டேட்டா வசதியைப் பெற விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் நல்ல தேர்வாக இருக்கும்.

ரூ. 198 திட்டத்தில் ஒரு நாளின் செலவு சுமார் 14 ரூபாய் மட்டுமே. பயனர்கள் இந்த திட்டத்தை ஒரு மாதத்திற்கு இரண்டு முறை ரீசார்ஜ் செய்தால் மொத்தம் செலவு ரூ 396 ஆக இருக்கும். எனவே ஜியோ ரூ. 349 ரீசார்ஜ் மற்றொரு திட்டத்தை கொண்டுள்ளது.

இது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்குகிறது. இரண்டு திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாக் ரூ.198 திட்டமானது மாதம் இருமுறை ரீசார்ஜ் செய்தால் ரூ.249 திட்டத்தை விட ரூ.47 அதிகமாக இருக்கும்.

My Jio ஆப் மூலம் ரீசார்ஜ்:

புதிய ரூ.198 திட்டம் கூகுள் பே, பேடிஎம், போன்பே மற்றும் பிற ரீசார்ஜ் தளங்களில் My Jio ஆப்ஸுடன் கிடைக்கிறது. ஆனால் சில தளங்களில் ரீசார்ஜ் செய்ய 1 முதல் 3 ரூபாய் வரை கூடுதல் சேவைக் கட்டணம் விதிக்கப்படலாம். அதே நேரத்தில் My Jio ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை.

Leave a Comment

Join Group!