விடுமுறை அறிவிப்பில் மாற்றம் – அரசாணை வெளியீடு! முழு விவரம் உள்ளே

Miladi Nabs Leave Change: இஸ்லாமிய சமூகம் சிறப்பாகக் கொண்டாடும் ஒரு முக்கிய பண்டிகை மிலாடி நபி  ஆகும். இந்நாளில் முஹம்மது நபியின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். முஸ்லிம்கள் உலகம் முழுவதும் இந்த நாளை மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

தமிழகத்தில் மிலாடி நபி வருகிற செப்டம்பர் 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்த நிலையில், தமிழ்நாடு அரசு அந்த நாளை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக தலைமைச் செயலர் வெளியிட்டுள்ளார்.

விடுமுறை அறிவிப்பில் மாற்றம்:

முதலில், இந்த ஆண்டு மிலாடி நபி செப்டம்பர் 16-ம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், செப்டம்பர் 4-ம் தேதி மாலை ரபிஉல் அவ்வல் மாதம் பிறை தென்படாததால், அந்த நாளுக்குப் பதிலாக மறுநாள் செப்டம்பர் 17-ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்தார். இதற்கு இணங்க, தமிழக அரசு செப்டம்பர் 17-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

அரசாணை வெளியீடு:

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், செப்டம்பர் 16-ம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 17-ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்துப் பொது மற்றும் அரசு துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் பொருந்தும்.

இந்த பொது விடுமுறை மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் மற்றும் சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று இந்நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவும்.

நான்கு நாள்கள் விடுமுறை:

மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிலாது நபி பண்டிகை நாளில் மூன்று தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்கான திட்டங்களை முன்கூட்டியே செய்துவிட்டனர். செப்டம்பர் 14 (சனி), செப்டம்பர் 15 (ஞாயிறு), செப்டம்பர் 16 (திங்கள்) ஆகிய நாட்களில் விடுமுறை இருப்பதாக எண்ணி, பலர் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டனர்.

இந்நிலையில், மிலாது நபி செப்டம்பர் 17, செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டதோடு, செப்டம்பர் 16-ம் தேதி விடுமுறை பெற முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்த மூன்று நாள் தொடர்ச்சி விடுமுறை சிலருக்கு ஏமாற்றமாக அமையக்கூடும். இருப்பினும், திங்கள் அன்று கூடுவிடுமுறை பெற்றால், செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 19 வரை நான்கு நாள்கள் விடுமுறை கொண்டாட முடியும்.

செப்டம்பர் 16ஆம் தேதி பலர் விடுமுறை எடுத்துக் கொண்டால் செப்டம்பர் 17 சேர்த்து அவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். எனவே விடுமுறைக்கு ஏற்கனவே பிளான் செய்தவர்கள் செப்டம்பர் 16 விடுமுறையாக எடுத்துக் கொண்டு நான்கு நாட்கள் விடுமுறையை அனுபவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Join Group!