Puzhal Prison Job: புழல், மத்திய சிறையில் காலியாக உள்ள 3 சமையலர், லாரி ஓட்டுனர் மற்றும் நெசவு போதகர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம். புழல், மத்திய சிறையில் காலியாக உள்ள 3 சமையலர், லாரி ஓட்டுனர் மற்றும் நெசவு போதகர் காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் தெளிவாக பின்பற்றி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் இந்த பணியிடங்களுக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை விரிவாக காண்போம்.
வயது விவரங்கள்
நீங்கள் இந்த புழல், மத்திய சிறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்களது வயது வரம்பானது குறைந்த பட்சம் 18 ஆக இருக்க வேண்டும் மற்றும் அதிகபட்சம் 32 வயதாக இருக்க வேண்டும். இருந்தபோதிலும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
இந்த சமையலர், லாரி ஓட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வண்ணப்பதாரர்கள் 8th, முடித்திருக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் இதனுடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நெசவு போதகர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கைத்தறி நெசவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அவர் டிப்ளமோ முடித்து இருந்தாலும் இந்த பணியிடங்களுக்கு தகுதியானவராக கருதப்படுவார். மேலும் கல்வி தகுதி பற்றிய தகவலுக்கு அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை தெளிவாக படிக்கவும்.
சம்பள விவரங்கள்
இந்தப் பணியிடங்களுக்கு சம்பளம் என்னவென்றால் சமையலர், லாரி ஓட்டுனர் பதவிகளுக்கு மாத சம்பளம் ரூபாய் ரூ. 15,900 – 71,900 வரை இருக்கும். அதே நெசவு போதகர் பணியிடங்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 19,500 – 71,900 வரை சம்பளம் கிடைக்கும்.
விண்ணப்ப கட்டணம்
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் SC /ST மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் கிடையாது. மாற்றுத்திறனாளிகளுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது. எனவே இவர்கள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://chennai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
முகவரி:
சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை -1, புழல், சென்னை – 66
முக்கிய இணைப்புகள்
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளம் கீழே கொடுத்துள்ளேன் அதன் மூலமாக நீங்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 29 ஆகஸ்ட் 2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13 செப்டம்பர் 2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply